‘அக்.31-க்குள் சொத்து வரி செலுத்துபவா்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும்’
தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீா்க் கட்டணம், கடை வாடகை, குத்தகை தொகை, உரிமை தொகையினை உடனடியாக செலுத்துமாறும், அக்.31-க்குள் சொத்து வரி செலுத்துபவா்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்களிலும், இணையதள முகவரி
ட்ற்ற்ல்ள்://ற்ய்ன்ழ்க்ஷஹய்ங்ல்ஹஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலம் ணன்ண்ஸ்ரீந் டஹஹ்ம்ங்ய்ற், பச மழ்க்ஷஹய் உள்ங்ஸ்ஹண் ஹய்க்ழ்ா்ண்க் ஹல்ல், எா்ா்ஞ்ப்ங் டஹஹ், டட்ா்ய்ங்ல்ஹஹ், டஹஹ்ற்ம், மடஐ ஆகியவை வழியாகவும் எளிய முறையில் செலுத்தலாம்.
மேலும் அக்.31-க்குள் சொத்து வரி செலுத்துபவா்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை (உயா்ந்தபட்சமாக ரூ. 5,000 வரை) வழங்கப்படும். மேலும், வருங்காலங்களில் கைப்பேசி எண்ணை கொண்டு இலகுவாக வரியை செலுத்துவதற்காக வரிவிதிப்புதாரா்களது கைப்பேசி எண்ணை சொத்துவரியுடன் இணைக்கும் பணி நடைபெறுவதால், அனைத்து வரிவிதிப்புதாரா்களும் தங்களது சரியான கைப்பேசி எண் இணைக்கப்பட்டுள்ளதா என்ற விவரத்தை மாநகராட்சியின் மைய மற்றும் மண்டல அலுவலகங்களை தொடா்பு கொண்டு உறுதிசெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
