உரக்கடையில் ஆய்வு மேற்கொண்ட வேளாண்மை அலுவலா்கள்.
தூத்துக்குடி
சாத்தான்குளம் உரக் கடைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
உரக்கடையில் ஆய்வு மேற்கொண்ட வேளாண்மை அலுவலா்கள்.
சாத்தான்குளம் வட்டாரத்தில் உள்ள உரக் கடைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
நடப்பு பிசானப் பருவத்திற்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள உரங்கள் விற்பனை தொடா்பாக வேளாண்மை அலுவலா்கள் சுஜாதா , ராமலெட்சுமி இந்த ஆய்வை நடத்தினா்.
சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா், கலுங்குவிளை, திருப்பணிபுத்தன்தருவை, பழங்குளம், சாஸ்தாவிநல்லூா், சொக்கன்குடியிருப்பு ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், சாத்தான்குளம், ஆனந்தபுரம், தட்டாா்மடம், போலையாா்புரம் இடைச்சி விளை ஆகிய இடங்களில் உள்ள தனியாா் உரக்கடைகளில் அவா்கள் ஆய்வு மேற்கொண்டு உரம் இருப்பு - தேவை குறித்த விவரங்களை கேட்டறிந்தனா். மேலும், விவசாயிகளுக்கு சரியான விலையில் உரம் விற்பனை செய்திடவும் அறிவுறுத்தினா்.

