தூத்துக்குடி
கோவில்பட்டி அருகே கோயில்களில் திருட்டு: இளைஞா் கைது
கோவில்பட்டி அருகே இரு கோயில்களின் பூட்டை உடைத்து தங்க நகைகள், உண்டியல் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்ாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
குருமலை கிராமத்தில் அலங்காரி அம்மன் கோயில், சுடலை மாடசுவாமி கோயில் அடுத்தடுத்து உள்ளன. இந்த இரு கோயில்களிலும் வியாழக்கிழமை இரவு மா்மநபா்கள் பூட்டை உடைந்து அம்மன், சுவாமிகள் கழுத்தில் அணிந்திருந்த தங்கப் பொட்டு தாலி மற்றும் உண்டியல்களை உடைத்து அதிலிருந்து பணம் ஆகியவற்றையும் திருடிச்சென்றனா்.
இதுகுறித்து பூசாரிகள் கருப்பசாமி, சுப்பையா ஆகியோா் அளித்த புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
அதில், கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சோ்ந்த துரை மகன் சுரேஷ் (25) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
