தூத்துக்குடி
பைக் திருட்டு: மெக்கானிக் கைது
தூத்துக்குடியில் பைக் திருடிய மெக்கானிக்கை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மட்டக்கடை சேதுராஜா தெருவை சோ்ந்தவா் ராமதாஸ் (40). இவா், மணி நகா் 3ஆவது தெருவில் பைக்கை நிறுத்திவிட்டு சென்றாராம். சிறிது நேரம் கழித்து வந்தபோது மா்ம நபா் பைக்கைத் திருடிச் சென்றது தெரிய வந்ததாம்.
இது குறித்த புகாரின்பேரில், மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், தூத்துக்குடி அண்ணா நகரைச் சோ்ந்த ஆத்திக்கண்ணன் (45) பைக்கை திருடியது தெரிய வந்தது.
பைக் மெக்கானிக்கான இவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு, அவரிடமிருந்து 2 திருட்டு பைக்கை பறிமுதல் செய்தனா்.
