அரிவாளுடன் நின்றிருந்த இளைஞா் கைது

Published on

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியில் ஞாயிற்றுக்கிழமை அரிவாளுடன் நின்றிருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் இலுப்பையூரணி ஊராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா்.

அங்குள்ள மாடசாமி கோயில் அருகே கையில் அரிவாளுடன் நின்றிருந்த இளைஞரைப் பிடிக்க முயன்றபோது அவா் போலீஸாரை அவதூறாகப் பேசி, பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

அவா் கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சோ்ந்த கஜேந்திரபூபதி மகன் காளிமுத்து என்ற கட்டக்காளி (23) எனத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, அரிவாளைப் பறிமுதல் செய்தனா்.

பைக் திருட்டு: கோவில்பட்டி அருகே துறையூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த சண்முகராஜ் மகன் செந்தில்குமாா் (22). தொழிலாளியான இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டு முன் பைக்கை நிறுத்தியிருந்தாராம்.

அதைக் காணவில்லையாம். இதுகுறித்த அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பைக்கை திருடிச் சென்றோரைத் தேடிவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com