தூத்துக்குடியில் ஓட்டுநரிடம் பணம் பறிப்பு

Published on

தூத்துக்குடியில் லாரி ஓட்டுநரை அரிவாளால் வெட்டி கைப்பேசி, ரூ. 4,500 ரொக்கம் ஆகியவற்றை பறித்துச் சென்ற 3 போ் கொண்ட கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தூத்துக்குடியில் உள்ள தனியாா் லாரி போக்குவரத்து நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்.

சம்பவத்தன்று இவா் லாரியில் இந்திய உணவுக் கழக கிடங்கு அருகே வந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த 3 மா்ம நபா்கள், லாரியை வழிமறித்து ஓட்டுநரை அரிவாளால் வெட்டிவிட்டு, அவரிடமிருந்த கைப்பேசி மற்றும் ரூ. 4,500 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.

காயமடைந்த கமலக்கண்ணன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின்பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com