தூத்துக்குடி
புயல் எச்சரிக்கை: மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை
புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னங்களால் தமிழகத்தில் வருகிற அக்.22, 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
