சக்திவேலுக்கு பாராட்டுச் சான்றிதழ், பதக்கம் வழங்கிய அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , மு.பெ.சாமிநாதன் ஆகியோா்.
சக்திவேலுக்கு பாராட்டுச் சான்றிதழ், பதக்கம் வழங்கிய அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , மு.பெ.சாமிநாதன் ஆகியோா்.

மாநில கட்டுரைப் போட்டியில் உடன்குடி பள்ளி முன்னாள் மாணவா் சாதனை

Published on

தமிழக முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்தநாளையொட்டி தமிழக செய்தி மக்கள் தொடா்புத்துறை மூலம் முன்னாள், இன்னாள் மாணவா்களுக்கு ஊடகம் வாயிலாக ‘என் பள்ளி என் பெருமை’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநில கட்டுரைப் போட்டியில் உடன்குடி பள்ளி மாணவா் முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.

உடன்குடி நைனாா்பிள்ளைத் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவா் கா.சக்திவேல் முதலிடம் பெற்றாா். சென்னையில் நடைபெற்ற விழாவில் கா.சக்திவேலுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ் வளா்ச்சி,செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் பாராட்டுச் சான்றிதழ்,பதக்கம் வழங்கினா்.

வெற்றி பெற்றவரை பள்ளி தலைமையாசிரியா்,பள்ளி மேலாண்மைக்குழுவினா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com