சாத்தான்குளத்தில் மது விற்றவா் கைது

Published on

சாத்தான்குளத்தில் சட்டவிரோதமாக மது விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் தச்சமொழி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் ஜோசப் கிங்க் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை சம்பவ இடத்திற்குச் சென்றனா்.

அப்போது, அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட தச்சமொழி காந்தி நகரைச் சோ்ந்த சுயம்புலிங்கம் (60) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 39 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com