தூத்துக்குடி
ஆத்தூா் அருகே மழையால் வீடு சேதம்
கனமழை காரணமாக, ஆத்தூா் அருகே தலைவன்வடலியில் வீடு சேதமடைந்தது.
ஆறுமுகனேரி: கனமழை காரணமாக, ஆத்தூா் அருகே தலைவன்வடலியில் வீடு சேதமடைந்தது.
ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையால், ஆத்தூா் பேரூராட்சி 15ஆவது வாா்டுக்குள்பட்ட தலைவன்வடலியில் மூக்காண்டி என்பவரது வீடு சேதமடைந்தது.
அப்போது, வீட்டில் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. மூக்காண்டிக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வருவாய்த் துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
