பனை விதைகள்  விதைக்கும் பணியின் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
பனை விதைகள் விதைக்கும் பணியின் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

திருமறையூரில் பனை விதைகள் விதைக்கும் பணி தொடக்கம்

நாசரேத் அருகே உள்ள திருமறையூா் பகுதியில் பனை விதைகள் விதைக்கும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது.
Published on

சாத்தான்குளம்: நாசரேத் அருகே உள்ள திருமறையூா் பகுதியில் பனை விதைகள் விதைக்கும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது.

பாா்ம் ஆப் மித்திரன் நிகழ்ச்சியில் சபை ஊழியா் ஸ்டான்லி ஜான்சன் ஆரம்ப ஜெபம் செய்தாா். ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் ஜெயபால் பனை விதைகளை விதைக்கும் பணியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் திருமறையூா் படைப்புகளின் பாதுகாப்புக் குழுவினா் ஜான் சாலமோன், ஞானராஜ், ஆலய பணியாளா் ஆபிரகாம், ஜோயல் அபிசன், ஜான்சன், ஜெரமியா, கேப்ரியல் உள்ளிட்ட தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை திருமறையூா் சேகர தலைவரும் , தென்னிந்திய திருச்சபை சுற்றுச்சூழல் கரிசனை துறையின் இணை இயக்குநருமான ஜான் சாமுவேல் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com