முதலூா் பகுதியில் பனை விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்டோா்.
தூத்துக்குடி
முதலூா் பகுதியில் 2000 பனை விதைகள் விதைப்பு
சாத்தான்குளம் பகுதியில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தின் கீழ் முதலூா் சுற்று வட்டாரப் பகுதியில் 2000 பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தின் கீழ் முதலூா் சுற்று வட்டாரப் பகுதியில் 2000 பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.
முதலூா் சபை ஊழியா் இம்மானுவேல் பீட்டா் ஜெபித்து தொடங்கி வைத்தாா். சாத்தான்குளம் நட்சத்திர அரிமாசங்கம் முன்னாள் தலைவா் ஏ.கே.எஸ். சுந்தா் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் செல்வகுமாா், தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளி தாளாளா் சாந்தாராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் வேளாண் துறை அலுவலா் கனிஷ்டன், வேலைவாய்ப்புத் துறை அலுவலா் சாம் கிருபாகரன், திருநெல்வேலி மாவட்ட வன பாதுகாப்பு படை குழுவினா் பங்கேற்று சுமாா் 2000 பனை விதைகளை விதைத்தனா்.
ஏற்பாடுகளை பால் வளத்துறை பிரவின் செய்திருந்தாா்.

