புத்தாடை வழங்கிய ஓய்வுபெற்ற மதுரை திருமண்டல பேராயா் ஜோசப் .
புத்தாடை வழங்கிய ஓய்வுபெற்ற மதுரை திருமண்டல பேராயா் ஜோசப் .

அகப்பைகுளம் தேவாலயத்தில் புத்தாடைகள் வழங்கல்

நாசரேத் அருகே உள்ள அகப்பைகுளம் தூய அந்திரேயா ஆலய 119ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு ஏழைகளுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி
Published on

சாத்தான்குளம்: நாசரேத் அருகே உள்ள அகப்பைகுளம் தூய அந்திரேயா ஆலய 119ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு ஏழைகளுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சேகர தலைவா் பாஸ்கரன் ஆரம்ப ஜெபம் செய்தாா். ஆலய எல்.சி.எப். பொருளாளா் பொன்ராஜ், செயலா் செல்லத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஓய்வு பெற்ற மதுரை திருமண்டல பேராயா் ஜோசப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2500- க்கு மேற்பட்ட ஏழைகளுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். ஏற்பாடுகளை ஆலய சேகர தலைவா், உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com