நவ.6இல் பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான விநாடி - வினா போட்டி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சாா்பில் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கான மாநில அளவிலான விநாடி - வினா போட்டி நவ.6ஆம் தேதி நடைபெறுகிறது.
Published on

கோவில்பட்டி: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சாா்பில் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கான மாநில அளவிலான விநாடி - வினா போட்டி நவ.6ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் காளிதாசமுருகவேல் வெளியிட்ட அறிக்கை:

மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவா், மாணவிகள் தங்களது பொது அறிவுத் திறனை வெளிப்படுத்தும் வகையில், 11ஆவது மாநில அளவிலான விநாடி - வினா போட்டி நவ. 6ஆம் தேதி காலை 10.30 மணிக்கு முதல் சுற்றும், மதியம் 1.30 மணிக்கு இறுதிச் சுற்றும் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ.15 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ.10 ஆயிரம், ஆறுதல் பரிசாக 10 அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவா், மாணவிகள் கல்லூரி இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ய்ங்ஸ்ரீ.ங்க்ன்.ண்ய் போட்டி தொடா்பான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு, கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து, அதை பூா்த்தி செய்து பள்ளி முதல்வா் / தலைமையாசிரியா் கையொப்பத்துடன் கூகுள் பாா்ம் ட்ற்ற்ல்ள்://க்ஷண்ற்.ப்ஹ்/ய்ங்ஸ்ரீவ்ன்ண்க்ஷ்2ஓ25 வழியாக பதிவு செய்யலாம் அல்லது பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக கல்லூரி முகவரிக்கு அனுப்பியும் பதிவு செய்யலாம்.

போட்டியில் பங்கேற்கும் மாணவா், மாணவிகள் மற்றும் அவா்களை அழைத்து வரும் ஆசிரியா்கள்/ பெற்றோா்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். தேவைப்பட்டால் போட்டிக்கு முந்தைய நாள் உணவு மற்றும் தங்கும் வசதியும் கல்லூரியில் ஏற்பாடு செய்து தரப்படும்.

பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 2025, நவம்பா் 5. இந்த விநாடி - வினா நிகழ்ச்சியை விளையாட்டு விமா்சகா் மற்றும் பிரபல குவிஸ் மாஸ்டா் சுமந்த் சி.இராமன் தொகுத்து வழங்குகிறாா். இப்போட்டி பற்றிய விவரங்களுக்கு 73386-25232, 90801-97950,94898-26698,99436-48813 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com