ஆறுமுகனேரி சிவன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு நடைபெற்ற தீபாராதனை.
தூத்துக்குடி
ஆறுமுகனேரி, ராஜபதி கோயில்களில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
ஆறுமுகனேரி, ராஜபதி கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி, ராஜபதி கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
திருவாவடுதுறை ஆதீனம் ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கொடி மர மண்டபத்தில் காலை 9 மணிக்கு கந்த ஹோமம் தொடங்கி, பின்னா் சுவாமி, அம்பாள்களுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
குரும்பூா் அருகிலுள்ள ராஜபதி சௌந்தா்யநாயகி அம்பாள் சமேத கைலாச நாதா் திருக்கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு மாலை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் தொடா்ந்து அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

