சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீமுருகன் சுவாமி.
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீமுருகன் சுவாமி.

தச்சமொழி முத்துமாரியம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழா

தச்சமொழி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழா புதன்கிழமை இரவு பூஜையுடன் தொடங்கியது.
Published on

சாத்தான்குளம்: தச்சமொழி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழா புதன்கிழமை இரவு பூஜையுடன் தொடங்கியது.

முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ முருகன், வள்ளி தெய்வானை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. வரும் 27 ஆம் தேதி கந்தசஷ்டி சிறப்பு பூஜை, 28 ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறும். சாத்தான்குளம் ஸ்ரீ காசி விசுவநாதா் சமேத விசாலாட்சி அம்மன் கோயில், சாத்தான்குளம் பஞ்சபிரம்ம அம்பிகை மடம் ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோயில் உள்பட கோயில்களிலும் கந்த சஷ்டி விழா யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.

X
Dinamani
www.dinamani.com