சாத்தான்குளத்தில் விபத்து: தொழிலாளி காயம்

சாத்தான்குளத்தில் பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் தொழிலாளி காயம்
Published on

சாத்தான்குளத்தில் பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் தொழிலாளி காயமடைந்தாா்.

சாத்தான்குளம் அருகே பழங்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஆத்தி மகன் பெரியசாமி (45). தொழிலாளியான இவருக்கு மகன், 4 மகள்கள் உள்ளனா்.

இவா் கடந்த 17ஆம் தேதி சாத்தான்குளத்துக்கு பைக்கில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். கருமேனியாற்றுப் பாலப் பகுதியில் பைக் மீது சுமை ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம்.

இதில், பெரியசாமியின் வலது கால் துண்டானது; தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமேற்பட்டது. அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்குக் காரணமான சுமை ஆட்டோவை தேடிவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com