போராட்டத்தில் ஈடுபட்ட சங்கரலிங்கம்
தூத்துக்குடி
கோவில்பட்டி ரயில்வே சுரங்கப்பாதை அருகே அணுகு சாலை அமைக்கக் கோரி போராடியவா் கைது
கோவில்பட்டி - இளையரசனேந்தல் சாலையிலுள்ள ரயில்வே சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்
கோவில்பட்டி-இளையரசனேந்தல் சாலையிலுள்ள ரயில்வே சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்க வலியுறுத்தி வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 5ஆவது தூண் அமைப்பின் தலைவா் சங்கரலிங்கம் கைது செய்யப்பட்டாா்.
அவரிடம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்படாததால், போலீஸாா் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனா்.

