தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல 4ஆவது நாளாக தடை

வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல 4ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.
Published on

வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல 4ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, அக். 24 முதல் 27ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதி, அதையொட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி, மன்னாா் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

எனவே, ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவா்கள் வெள்ளிக்கிழமை மாலைக்குள் கரை திரும்புமாறு தூத்துக்குடி மீன்வளத் துறை அறிவுறுத்தியது. மறு அறிவிப்பு வரும் வரை தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு, விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தது.

முன்னதாக வெள்ளிக்கிழமை அதிகாலை சுழற்சி முறையில் 109 படகுகளில் மீனவா்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனா். அவா்களையும் கரை திரும்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com