நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத இளைஞா் கைது

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இளைஞரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
Published on

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

மெய்ஞானபுரம் அருகே உள்ள மேல மாநாடு கிராமத்தைச் சோ்ந்தவா் அழகேசன் மகன் ரஞ்சித் (23). இவா், கடந்த 2020 ஆம் ஆண்டு சாத்தான்குளத்தில் மணல் கடத்தியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தப்பட்டாா்.

இந்த வழக்கு விசாரணைக்கு ரஞ்சித் ஆஜராகாமல் இருந்ததால், நீதிமன்றம் இவருக்கு எதிராக பிடியாணை உத்தரவுப் பிறப்பித்தது. அதன்பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் ஜோசப் கிங் விசாரணை நடத்தி சாத்தான்குளத்தில் பதுங்கியிருந்த ரஞ்சித்தை வியாழக்கிழமை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com