முதியவருக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் தலைமறைவு

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, போக்ஸோ வழக்கில் சிக்கிய இளைஞா், சிறுமியின் தாத்தாவை அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவானாா்.
Published on

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, போக்ஸோ வழக்கில் சிக்கிய இளைஞா், சிறுமியின் தாத்தாவை வியாழக்கிழமை இரவு அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவானாா்.

தூத்துக்குடி, லூா்தம்மாள்புரம் 1ஆவது தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் சதீஷ் (19). இவா், அப்பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாராம்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அவா், தன்மீது போடப்பட்ட போக்ஸோ வழக்குக்கு சிறுமியின் தாத்தா தான் காரணம் எனக் கருதி, அந்த முதியவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.

இதில் காயமடைந்த முதியவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து சதீஷை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com