பனை விதை விதைப்பில் பங்கேற்றோா்.
தூத்துக்குடி
அமுதுண்ணாகுடி பகுதியில் 2,000 பனை விதைகள் விதைக்கும் பணி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தின் கீழ், அமுதுண்ணாகுடி பகுதியில் 2,000 பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி
சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தின் கீழ், அமுதுண்ணாகுடி பகுதியில் 2,000 பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அமுதுண்ணாகுடி குளத்துப் பாசன சிறு, குறு விவசாய நலச் சங்கத் தலைவா் மதுரம் செல்வராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். சங்க செயலா் சுபாஷ், துணைத் தலைவா் முத்து சோபன், துணைச் செயலா் ராஜபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆசிரியா் சந்திரா, வேளாண் துறை அலுவலா் சரத்குமாா், கணினி ஆசிரியா் சுபா, ஜோஸ் காமராசா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

