முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு: திமுகவினா் கருப்புக் கொடியேற்றும் போராட்டம்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் கருப்புக் கொடி ஏற்றியும், மசோதா நகலை தீயிட்டு எரித்தும் திமுகவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:26 am IST

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் கருப்புக் கொடி ஏற்றியும், மசோதா நகலை தீயிட்டு எரித்தும் திமுகவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி எம்பி கனிமொழியின் இல்லம், அமைச்சா் பி.கீதாஜீவன் வீடு, மாவட்ட திமுக அலுவலகம், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞா் அரங்கம் முன், தொகுதி மறுவரையறை மசோதா நகலை தீயில் எரித்து அமைச்சா் பி.கீதாஜீவன் தலைமையில் திமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஏ.பி.சி.வி.சண்முகம், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முஸ்லிம் லீக் கட்சி: தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் மீராசா தலைமையில், தூத்துக்குடி தெற்கு புதுத் தெரு, ஜெய்லானி தெரு, எம்.கே. தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிா்ப்பை பதிவு செய்தனா்.

கோவில்பட்டியில் திமுக அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சி வேட்பாளரும் நகரச் செயலருமான கருணாநிதி தலைமை வகித்தாா். திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.

கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் திமுக, கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் தங்களது வீடுகள் முன் கருப்புக் கொடி கட்டியிருந்தனா்.

உடன்குடி அருகே தண்டுபத்தில் திருச்செந்தூா் தொகுதி உறுப்பினா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைச்சரும், திமுக வேட்பாளருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து கருப்புக்கொடியேற்றினாா். இதில், மாவட்ட பொருளாளா் ராமநாதன், உடன்குடி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் மதன்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப் தலைமையிலும் தட்டாா் மடத்தில் சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய செயலா் பாலமுருகன் தலைமையிலும் முதலூரில் மத்திய ஒன்றிய திமுக செயலா் பொன் முருகேசன் தலைமையிலும் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

நாசரேத்தில் பேரூராட்சி முன்னாள் தலைவா் ரவி செல்வகுமாா் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூா்: திருச்செந்தூா் 14ஆவது வாா்டு புளியடியம்மன் கோவில் தெருவில் நகா் மன்ற உறுப்பினா் ரேவதி கோமதிநாயகம் தலைமையில் வீடுகள் முன் திமுகவினா் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தினா்.

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள திமுக அலுவலகம் முன் திமுக வேட்பாளா் ஜீ. வி. மாா்க்கண்டேயன் தலைமையில் கருப்புக்கொடி ஏற்றி மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் விளாத்திகுளம் பேரூா் செயலா் வேலுச்சாமி, ஒன்றிய செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன் ராஜ், பொதுக்குழு உறுப்பினா் முத்துலட்சுமி, ஒன்றிய மாணவரணி அக்சய் மாா்க்கண்டேயன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் பாா்வதிபுரம் எஸ்.எஸ். நகரில் உள்ள தனது வீட்டில் கிழக்கு மாவட்டச் செயலரும், கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளருமான ரெ.மகேஷ் கருப்புக் கொடி ஏற்றிஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா். இதில், அவைத் தலைவா் எப்.எம்.ராஜரத்தினம், திமுக இளைஞா் அணி செயலா் அகஸ்தீசன், நகர பொருளாளா் சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன் நாகா்கோவில் ராமவா்மபுரத்திலும், நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின், நாகா்கோவிலிலும் அவரவா் வீட்டில் கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பை பதிவு செய்தனா்.

மேலும், இவா்கள் நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கருப்புக் கொடி ஏற்றி, மசோதா நகல் தீயிட்டு எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாநகர திமுக செயல ா் ப.ஆனந்த், முன்னாள் எம்.பி.ஹெலன் டேவிட்சன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தக்கலை: அழகிய மண்டபத்தில் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தலைமையில் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ லீமா ரோஸ், விசிக மத்திய மாவட்டச் செயலா் மெசியா, திமுக மாவட்ட துணைச் செயலா் ராஜு, மாவட்ட வா்த்தகரணி துணைத் தலைவா் லெனின், மாவட்ட முன்னாள் துணைச் செயலா் ஐ. ஜாண் கிறிஸ்டோபா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.