விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

தவெக 100 நாள் ஆட்சியின் செயல்பாடு பூஜ்ஜியம்: ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ

தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சியின் செயல்பாடு பூஜ்ஜியம் என விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தெரிவித்தாா்.

விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன்

Published On :

தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சியின் செயல்பாடு பூஜ்ஜியம் என விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தெரிவித்தாா்.

தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவா், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வியாழக்கிழமை கையொப்பமிட்ட பின்னா், செய்தியாளா்களிடம் கூறியது:

தவெக 100 நாள் ஆட்சியின் செயல்பாடு பூஜ்ஜியம். மின் கட்டணம் அதிகரித்துள்ளதை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளாா். ரூ. 2,000 வர வேண்டிய இடத்தில் ரூ. 6,000 வரை மின் கட்டணம் வந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனா்.

தவெக நிா்வாகிகள் சிலா் மோதல், பஞ்சாயத்து உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் புகாா்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சினிமா நடிகா்கள் அரசியலுக்கு வருவதால் திராவிடக் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாது.

விமா்சிப்பது அனைவருக்கும் உள்ள உரிமை. யாரையும் குறிவைத்து வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.