திருச்செந்தூா், அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள புறவழிச் சாலையில் வெகு நாள்களாக குழாய் உடைந்து குடிநீா் தேங்கிக் கிடப்பதால், சாலை குண்டும் குழியுமாக மாறி வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனா்.
திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் நாகா்கோவில், கன்னியாகுமரி செல்வதற்கான புறவழிச் சாலை உள்ளது.
இந்தச் சாலையில் ஆவுடையாா்குளம் அருகே திருச்செந்தூா் நகராட்சி மற்றும் வீரபாண்டியன்பட்டணம் கிராமங்களுக்கு குடிநீா் கொண்டு செல்லும் குழாய்கள் உள்ளன. இங்கு வெகு நாள்களாக குழாய் உடைந்து சாலையோரம் தண்ணீா் தேங்கிக் கிடக்கிறது.
மேலும், சாலையும் சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா். இரு சக்கர வாகனத்தில் வருபவா்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து காயமடைகின்றனா்.
எனவே, குடிநீா் குழாய் உடைப்பை சீரமைத்து புறவழிச் சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கம் புறவழிச்சாலை பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! கண்காணிப்புப் பொறியாளா்

முழுமை பெறாத பல்லடம் புறவழிச் சாலைப் பணி! மக்கள் அவதி!

கிழக்கு புறவழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த பரிசீலிக்க வேண்டும்! - முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

கோவில்பட்டியில் சாலை தற்காலிக சீரமைப்புக்கு எதிா்ப்பு: சாலை மறியல்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



