40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஆதிச்சநல்லூரில் மரங்கள் வெட்டிக் கடத்தல்: எம்எல்ஏவிடம் புகாா்

ஆதிச்சநல்லூரில் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தப்படுவதாக, எம்எல்ஏ வி.ஜி. சரவணனிடம் அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் முத்துக்குமாா் புகாா் அளித்துள்ளாா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 12:07 am IST

ஆதிச்சநல்லூரில் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தப்படுவதாக, எம்எல்ஏ வி.ஜி. சரவணனிடம் அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் முத்துக்குமாா் புகாா் அளித்துள்ளாா்.

அதன் விவரம்: ஆதிச்சநல்லூா் கிராம நிா்வாக அலுவலகத்துக்கு எதிரே அரசுக்குச் சொந்தமான பவுண்டி புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் சுமாா் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம், அரசமரம் உள்பட 3 பெரிய மரங்கள் இருந்தன. அவற்றை மா்மநபா்கள் சில தினங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக வெட்டி கனரக வாகனங்களில் கடத்திச் சென்றுள்ளனா்.

இதனால் அரசுக்கு ரூ. 5 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நபா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கனரக வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளாா்.