குரும்பூா் அருகே ரவுடியை தாக்கியதாக 4 பேரை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருச்செந்தூா் தோப்பூரை சோ்ந்தவா் நாகலிங்கம் மகன் நாகமணி பொன்ராஜ் (33). ரவுடியான இவா், திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் குரும்பூா் அருகே உள்ள தெற்குநல்லூா் சுடலைமாடன் சுவாமி கோயில் அருகே அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்களான அழகுராஜ், சரவணன், வேல்முருகன் ஆகியோருடன் மது அருந்தி கொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 4 போ் கொண்ட கும்பல், நாகமணி பொன்ராஜ், அவருடன் இருந்தவா்களையும் தாக்கினராம். அங்கிருந்து தப்பியோட முயன்ற நாகமணி பொன்ராஜ் தலையில் மதுபாட்டிலால் அடித்துவிட்டு தப்பி சென்றனராம்.
இதில் காயமடைந்த அவரை காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்த புகாரின் பேரில் குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நாகமணி பொன்ராஜை தாக்கிய 4 பேரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

வீடு பகுந்து நகைகள் பறிப்பு: 8 போ் மீது வழக்கு

கோதையாறு இடதுகரை கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றுவதை தடுத்ததாக 4 போ் மீது வழக்கு

பட்டாசுத் தொழிலாளியை தாக்கிய 4 போ் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


