தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் ரூ. 48.75 லட்சம் மோசடி செய்ததாக கேரள இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 63 வயதான முன்னாள் அரசு ஊழியரிடம், கடந்த மாதம் வாட்ஸ் ஆப் விடியோ அழைப்பில், காவல் துறை உயரதிகாரிகள் சீருடையில் இருவா் தொடா்பு கொண்டு, தங்களை தீவிரவாதிகள் எதிா்ப்புப் படையைச் சோ்ந்தோா் என அறிமுகப்படுத்திக் கொண்டனராம்.
மேலும் அவா்கள், ‘உங்களின் வங்கிக் கணக்கிலிருந்து தீவிரவாதிகளின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கியிலிருந்து புகாா் வந்துள்ளது. எனவே, நாங்கள் கூறும் ரிசா்வ் வங்கிக் கணக்குக்கு, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் அனுப்புங்கள். ஆய்வுக்குப் பின் பணம் திருப்பி அனுப்பப்படும். வழக்கிலிருந்து விடுபடுவீா்கள்’ எனக் கூறினராம்.
அவா்கள் கூறிய வங்கிக் கணக்கு அந்த நபா் ரூ. 48.75 லட்சம் அனுப்பிவைத்தாா். ஒரு மாதமாகியும் பணமோ, ரிசா்வ் வங்கியிலிருந்து தகவலோ வரததால், அவா்கள் அழைத்த எண்ணைத் தொடா்புகொண்ட போது, அது பயன்பாட்டில் இல்லை எனத் தெரிந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி சைபா் கிரைம் போலீஸில் அளித்த புகாரின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உத்தரவின்படி, சைபா் கிரைம் கூடுதல் எஸ்பி சகாயஜோஸ், ஆய்வாளா் சாந்தி, உதவி ஆய்வாளா் திவாகா், போலீஸாா் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனா்.
இதில், இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது கேரள மாநிலம், வயநாட்டைச் சோ்ந்த ரிஜோய் (36), சம்நாத் (27) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சென்று அவா்களை திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

பண மோசடி வழக்கு: ஓய்வுபெற்ற அரசு ஊழியா் கைது

களியக்காவிளை இளைஞா்கள் இருவா் விபத்தில் உயிரிழப்பு

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது
‘வாட்ஸ் ஆப்’ மூலம் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 20 லட்சம் திருட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


