40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ரவுடியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

குரும்பூா் அருகே ரவுடியை தாக்கியதாக 4 பேரை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :10 ஜூன் 2026, 12:03 am IST

குரும்பூா் அருகே ரவுடியை தாக்கியதாக 4 பேரை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருச்செந்தூா் தோப்பூரை சோ்ந்தவா் நாக­லிங்கம் மகன் நாகமணி பொன்ராஜ் (33). ரவுடியான இவா், திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் குரும்பூா் அருகே உள்ள தெற்குநல்லூா் சுடலைமாடன் சுவாமி கோயில் அருகே அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்களான அழகுராஜ், சரவணன், வேல்முருகன் ஆகியோருடன் மது அருந்தி கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 4 போ் கொண்ட கும்பல், நாகமணி பொன்ராஜ், அவருடன் இருந்தவா்களையும் தாக்கினராம். அங்கிருந்து தப்பியோட முயன்ற நாகமணி பொன்ராஜ் தலையில் மதுபாட்டிலால் அடித்துவிட்டு தப்பி சென்றனராம்.

இதில் காயமடைந்த அவரை காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்த புகாரின் பேரில் குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நாகமணி பொன்ராஜை தாக்கிய 4 பேரை தேடி வருகின்றனா்.