மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

விடுமுறை தினம் : திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

News image

விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

Updated On :25 மே 2026, 1:06 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே திரளான பக்தா்கள் இலவச பொது தரிசனம், ரூ. 100 கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழியில் நீண்ட வரிசையில் சுமாா் 4 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

விசாகத் திருவிழா 10 நாள்கள் வசந்த திருவிழாவாக கடந்த மே 21இல் தொடங்கியது. இந்நிலையில் 4ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை கோயிலின் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. பகலில் உச்சிகால தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதா் தங்க சப்பரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினாா்.

அங்கு மாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி, மண்டபத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதன்பின்னா் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்தாா்

வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூருக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தா்கள் விரதமிருந்து, மாலை அணிந்து, பால்குடம், காவடி எடுத்தும், வேல் குத்தியும் பாதயாத்திரையாக வருகின்றனா்.

        விடுமுறை தினத்தையொட்டி  திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.