கும்பகோணம், செப். 6: கும்பகோணம் ஆதிகம்பட்ட விசுவநாதர் திருக்கோயில் வடக்கு வீதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மலையாள மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கோயிலில் அண்மையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பணிகள் முடிவடைந்ததையொட்டி, செப். 4 ஆம் தேதி முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு விமானத்தைச் சென்றடைந்தது. தொடர்ந்து, விமான கும்பாபிஷேகமும், மூலஸ்தான மகா அபிஷேகமும் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை இரவு மலையாள மாரியம்மன் புஷ்ப விமானத்தில் வீதியுலா நடைபெற்றது.
ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.