பெரம்பலூர், டிச. 11: பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் உயிரி தொழில்நுட்பவியல் துறையில், கல்லூரி விரிவுரையாளர் தகுதித் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன் சிறப்பு வகுப்புகளைத் தொடக்கிவைத்துப் பேசினார்.
கல்லூரி முதல்வர் பி.எஸ். ஜோசப், தேசிய மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வின் அவசியம், பாடத் திட்ட முறைகள், தேர்வு எழுதி வெற்றி பெறும் நுணுக்கங்கள் குறித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி இயக்குநர் இரா. சுவாமிநாதன், துணை முதல்வர் டி. லீமா பீட்டர், துறைத் தலைவர் வ. குமரேசன், பேராசிரியர்கள் கலைவாணி, ராஜேஷ், கீதா, ப. வீராசாமி, ஜெயஸ்ரீ, சரண்யா மற்றும் அறிவியல் துறை, கலைத் துறை மாணவர்கள் பங்கேற்றனர்.
நுண்ணுயிரியல் துறை
கூட்டமைப்பு விழா:
இதே கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் கூட்டமைப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன் தலைமை வகித்தார்.
விழாவில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர் ஏ. வேல்முருகன், இயற்கை சார்ந்த மருத்துவ முறைகளின் பயன்பாடும், அதை உபயோகிக்கும் முறை குறித்தும், யோகாவின் செயல் முறைகள், அதன் செய்முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
இதில் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் பி. ஆனந்தராஜ், பேராசிரியர்கள் சண்முகம், மீரா, பிரபாவதி, வள்ளியம்மை உள்ளிட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.