திருச்சி
நாகையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
நாகப்பட்டினம், டிச. 18: நாகை மின் பகிர்மான வட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாகை, சட்டையப்பர் கீழ வீதியில் உள்ள மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் டிச. 20-ம் தேதி பிற்பகல் 3.3
நாகப்பட்டினம், டிச. 18: நாகை மின் பகிர்மான வட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாகை, சட்டையப்பர் கீழ வீதியில் உள்ள மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் டிச. 20-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
நாகை மின் பகிர்மான வட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர் இக்கூட்டத்தில் பங்கேற்று, குறைகளைத் தெரிவித்துத் தீர்வுப் பெறுமாறு நாகை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் என். மோகனசுந்தரம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.