பெரம்பலூர், டிச. 18: பெரம்பலூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் ரூ. 29 ஆயிரம் ரொக்கத்தை பறித்துச் சென்ற நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.
பிரம்மதேசம் நடுத் தெருவைச் சேர்ந்த துரைராஜ் மனைவி தங்கமணி (35). இவர் சனிக்கிழமை காலை வாலிகண்டபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ. 29 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு பிரம்மதேசம் கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது, அந்தப் பகுதியில் உள்ள வாலீசுவரர் கோயில் அருகே நின்றிருந்த அடையாளம் தெரியாத 3 பேர் அவரது பையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தங்கமணி அளித்த புகாரின் பேரில், மங்கலமேடு போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.