மயிலாடுதுறை, டிச. 18: நாகை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முத்தூர் ஊராட்சியில் 353 பேருக்கு இலவச எரிவாயுவுடன் கூடிய அடுப்புகள் அண்மையில் வழங்கப்பட்டன.
பயனாளிகளுக்கான அடுப்புகளை வழங்கி, எம்எல்ஏ க. அன்பழகன் பேசியது:
அனைத்து தரப்பினருக்குமான நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. அரசின் சொத்துகளை சேதப்படுத்தாமல், பாதுகாப்பது அனைவரின் கடமையாகும். தமிழக அரசின் சலுகைத் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் அரசு சிறப்பு அக்கறை கொண்டுள்ளது என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டக் குழு முன்னாள் துணைத் தலைவர் ஆனந்தராசன் தலைமை வகித்தார். குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆர். மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினர் மங்கை. உமாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தரங்கம்பாடி தனி வட்டாட்சியர் விஜயன், ஊராட்சிமன்றத் தலைவர் கலியமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் தியாகராஜன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.