வெளிநாட்டில் பணியாற்றியவரின் ஊதியத்தை மோசடி செய்தவர் கைது

புதுக்கோட்டை, டிச. 18: வெளிநாட்டில் பணியாற்றிய புதுக்கோட்டை இளைஞரின் ஊதியத்தை மோசடி செய்தது தொடர்பாக ஒருவரை போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.      புதுக்கோட்டை கணேஷ்நகர் முதல் வீதியைச் சேர்ந்த தங்
Published on

புதுக்கோட்டை, டிச. 18: வெளிநாட்டில் பணியாற்றிய புதுக்கோட்டை இளைஞரின் ஊதியத்தை மோசடி செய்தது தொடர்பாக ஒருவரை போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

     புதுக்கோட்டை கணேஷ்நகர் முதல் வீதியைச் சேர்ந்த தங்கையா மகன் விஜயேந்திரன் (42).

    இவரை, மணப்பாறை அருகேயுள்ள மினிக்கு கிராமத்தைச் சேர்ந்த மு. வேலுச்சாமி (42) கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து, விஜயேந்திரன் அங்கு பணியாற்றி வந்த நிலையில் அவருக்குச் சேர வேண்டிய ஊதியம் ரூ.  2.5 லட்சத்தை மறைமுகமாக வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து வேலுச்சாமி பெற்றாராம்.

    இந்த நிலையில், சொந்த ஊருக்கு வந்த விஜயேந்திரன் தனது பணத்தைத் தரும்படி வேலுச்சாமியிடம் கேட்டுள்ளார். ஆனால், பணத்தைத் தராமல் விஜயேந்திரனை வேலுச்சாமி அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து, விஜயேந்திரன் அளித்த புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீஸôர் வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை வேலுச்சாமியை கைது செய்து விசாரிக்

கின்றர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com