துறையூர், டிச. 26: துறையூர் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற ரங்கோலி கோலப்போட்டி பரிசளிப்பு விழா செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி சங்கத் தலைவர் பெ. பாலசுந்தரம் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் ஜே. பிளேக் சாலமன் சந்திரசேகரன், சங்கத்தின் முன்னாள் தலைவர் என்.எஸ். குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கரூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் எம். வினிதா, செயலர் ஆர். கவிதா, துணைத் தலைவர் ஜி. லீலாவதி ஆகியோர் ரங்கோலி மற்றும் கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினர்.
போட்டியில் 101 பெண்கள் பங்கேற்றனர். குமரன் துணிக்கடை சார்பில் முதல் பரிசாக ரூ. 5000 மதிப்பிலான பட்டுப்புடவையும், ஜெயலட்சுமி பாத்திரக்கடை சார்பில் இரண்டாம் பரிசாக சிறிய மாவு அரைக்கும் இயந்திரமும், மாருதி எலக்ட்ரானிக்ஸ் சார்பில் கைகடிகாரமும், அன்னை மருத்துவமனை சார்பில் 10 பேருக்கு ஆறுதல் பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
விழாவில் ரோட்டரி சங்க இயக்குநர் கே. சதானந்தம், குடும்ப விழாத் தலைவர் எம். இளங்கோவன், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஜி. முரளி, ஏ.எம். செல்வராஜ், ஏ. சரவணன், எம். கிருபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக டி.ஆர். மாதவன் வரவேற்றார். நிறைவில் ரோட்டரி சங்கச் செயலர் எஸ்.பி. மணிகண்ட ஆனந்த் நன்றி கூறினார்.