தஞ்சாவூர், டிச. 26: நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் ரத்த தான விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம், தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி ஆகியன இணைந்து நடத்தும் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாமில் இந்த முகாம் நடத்தப்பட்டது.
நாஞ்சிக்கோட்டை, கூத்தஞ்சாரி பகுதியைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான மக்கள் ரத்த தான விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் பி. வித்யா, சி. சண்முகப்பிரியா, எம். முகம்மது மன்சூர் ஆகியோர் பொதுமக்களை பரிசோதனைசெய்தனர்.
பாரத் கல்லூரி முதல்வர் சி. சிவபுண்ணியம், கல்விப் புலத் தலைவர் ஆ. ராமச்சந்திரன், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மதிமலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.