பெரம்பலூர், டிச. 26: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை டிராக்டர் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
வேப்பந்தட்டை அருகேயுள்ள அ. மேட்டூர் நந்தனார் தெருவைச் சேர்ந்தவர் மு. பரமசிவம் (67). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை அ. மேட்டூரில் இருந்து அரும்பாவூருக்கு சைக்கிளில் சென்ற போது, அ. மேட்டூரில் இருந்து எறையூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பரமசிவத்தை திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து புகாரின் பேரில், அரும்பாவூர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கராசு வழக்குப் பதிந்து, அ. மேட்டூர் புதுத் தெருவைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் பெருமாள் மகன் வெள்ளதுரையை (36) கைது செய்தார்.