சுடச்சுட

  

  திருச்சி, பிப். 6: மயிலைக் கொன்று எண்ணெய் தயாரித்த இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

  திருச்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள மயில்களைக் கொன்று, மயில் கறியிலிருந்து கிடைக்கும் எண்ணெய் தயாரித்து விற்பதாகவும், இந்த எண்ணெய் தடவினால் உடல் வலி, மூட்டு வலி நீங்கும் என்று கூறி, சிலர் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் போலீஸôருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீஸôர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் காந்தி மார்க்கெட் பிச்சைநகரில் உய்யகொண்டான் வாய்க்காலுக்கு அருகிலுள்ள வயல்காட்டில் இருவர் 4 மயில்களைக் கொன்று, அதில் உள்ள கறிகளிலிருந்து எண்ணெயை தயாரித்து வருவதாக வெள்ளிக்கிழமை மாலை போலீஸôருக்கு தகவல் கிடைத்தது.

  இதைத்தொடர்ந்து, காந்தி மார்க்கெட் காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் மற்றும் போலீஸôர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று, எண்ணெய் தயாரித்துக் கொண்டிருந்த இருவரை கைது செய்தனர்.

  தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருச்சி வரகனேரி நாயக்கர் தெருவைச் சேர்ந்த முகமது சுல்தான் மகன் முகமது காசிம் (40), சுப்பிரமணியபுரம், ஜெய்லானி தெருவைச் சேர்ந்த அன்சாரி மகன் நூர் முகமது (23) என்பது தெரிய வந்தது.

  இதைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து மயில் ரத்தம், இறகு போன்றவற்றை போலீஸôர் பறிமுதல் செய்தனர். தாங்கள் நரிக்குறவர்களிடம் இருந்த மயில்களை வாங்கி, அதிலிருந்து எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருவதாக அவர்கள் இருவரும் போலீஸôரிடம் தெரிவித்தனர்.

  கைது செய்யப்பட்ட இருவரும் திருச்சி நீதித்துறை நடுவர் மன்றம் எண் 5}ல் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவர்கள் மீது வனத் துறை மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai