சுடச்சுட

    

    கும்பகோணம், பிப். 25: கும்பகோணம் பேட்டை நாணயக்காரத்தெருவிலுள்ள சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலைய 50-வது ஆண்டு விழா வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

    அன்று காலை கருத்தரங்கமும், மாலையில் கவிஞர் கவிமுகிலின் நூல்களை ஈரோடு தமிழன்பன் தலைமையில் மாநில வணிகவரித் துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா வெளியிட உள்ளார்.

    கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ஆகியோர் நூல்களைத் திறனாய்வு செய்கிறார்கள். வாழ்த்தரங்கிற்குக் கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி தலைமை வகிக்கிறார். தொடர்ந்து, பட்டிமன்றமும் நடைபெற உள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai