கும்பகோணம், ஜன. 1: கும்பகோணம் கேஎஸ்கே கல்வியியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த கல்லூரி முதல்வர் கனகராஜன், நுகர்வோராக விளங்கும் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார்.
கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலர், வட்ட நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர் பாண்டியன் நுகர்வோரின் கடமை குறித்தும், தஞ்சை மாவட்ட கிராம நுகர்வோர் இயக்கத் தலைவர் சுந்தரவிமலநாதன் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை குறித்தும் பேசினர். கல்லூரிப் பேராசிரியர் பாரதிராஜா வரவேற்றார். பேராசிரியர் தங்கவேலு நன்றி கூறினார்.