முசிறி,ஜன. 1: முசிறியை அடுத்த தா. பேட்டையில் பாம்பு கடித்து இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தா. பேட்டை மலையப்பன் நகரைச் சேர்ந்தவர் புகழேந்தி மகன் புருஷோத்தமன் (19). கூலித் தொழிலாளி. வியாழக்கிழமை இரவு புருஷோத்தமன் தனது நண்பர்களுடன் அருகிலிருந்த வயல்வெளிக்குச் சென்றபோது அவரை பாம்பு கடித்தது.
இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து தா.பேட்டை காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.