நீடாமங்கலம், ஜன. 22: நீடாமங்கலம் அருகே சனிக்கிழமை அரசு விரைவுப் பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 30 பேர் காயமடைந்தனர்.
எர்ணாகுளத்திலிருந்து- வேளாங்கண்ணி நோக்கி அரசு விரைவுப் பேருந்து சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. இதுபோல கொரடாச்சேரியிலிருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு பூண்டி நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு பேருந்துகளும் நீடாமங்கலம் அருகேயுள்ள கோயில்வெண்ணி அருகே வந்த போது நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் இரு பேருந்துகளின் ஓட்டுநர்கள், பயணிகள், கல்லூரி மாணவர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து நீடாமங்கலம் போலீஸôர் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.