விருதுநகர், ஜன. 22: விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக அந்த ஆலையின் போர்மேனை போலீஸôர் கைது செய்தனர். தலைமறைவான ஆலை உரிமையாளர்கள் 4 பேரைப் போலீஸôர் தேடி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள ராஜுக்கண்ணா பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
போர்மேன் கைது: அஜாக்கிரதையுடன் செயல்பட்டு விபத்துக்கு காரணமான போர்மேன் காசி (35) என்பவரை போலீஸôர் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஆலை உரிமையாளர்கள் 4 பேரையும் போலீஸôர் தேடி வருகின்றனர்.
ரூ. 1 லட்சம் நிதி உதவி: இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோர் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகையாக அளிக்கப்படும்.
மேலும் காயம் அடைந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது' என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.