அறந்தாங்கி, ஜன. 22: அறந்தாங்கியில் நீர் மேலாண்மை தொடர்பான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண் பொறியியல் துறையின் தெற்கு வெள்ளாறு ஆற்றுப்படுகைத் திட்ட அலுவலகம் சார்பில் நடைபெற்ற இப்பயிலரங்குக்கு, வேளாண் பொறியியல் துறைக் கண்காணிப்புப் பொறியாளர் ப. சுந்தர் தலைமை வகித்தார். பயிலரங்கில் பயறு வகை சாகுபடி குறித்து உதவிப் பேராசிரியர் ஆர். நடராஜ், மூங்கில் சாகுபடி குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் பா. இளங்கோவன், மின் சிக்கனம் குறித்து மின் வாரியச் செயற்பொறியாளர் டி. தெட்சிணாமூர்த்தி, மழை வாழ்த்து என்ற தலைப்பில் மனவளக் கலை வீ. வீரமுத்து, பாசனதாரர் செயல்பாடுகள் குறித்து உதவிப் பொறியாளர் கா.ப. பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக, பொறியியல் துறைச் செயற்பொறியாளர் வி. முருகதுரை வரவேற்றார். நிறைவில், உதவிச் செயற்பொறியாளர் வி.ஆர்.ஏ. சிதம்பரம் நன்றி கூறினார்.