பெரம்பலூர், ஜன. 29: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் வெள்ளிக்கிழமை தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
தேசப்பிதா காந்தியின் நினைவு நாளான ஜன. 30-ம் தேதியை தியாகிகள் தினமாக அனுசரிக்கவும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கவும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதன்படி, 30-ம் தேதி அன்று அரசு விடுமுறை தினம் என்பதால், வெள்ளிகிழமை தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சு. பழனிசாமி, மகளிர் திட்ட அலுவலர் சு. தெய்வநாயகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சீ. சசிகலா (பொது), தமிழரசி (வளர்ச்சி), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கி. கண்ணதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.