பெரம்பலூர், ஜன. 29: பெரம்பலூர் நகரில் செவ்வாய்க்கிழமை (பிப். 1) முதல் காலை 6 மணி முதல் 8 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மின் வாரியச் செயற்பொறியாளர் ச. மனோகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
""பெரம்பலூர் நகர்ப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் 10 மணி வரை மின் விநியோகம் தடைசெய்யப்பட்டு வந்தது. தற்போது, மின் தடை நேரம் மாற்றப்பட்டு செவ்வாய்க்கிழமை (பிப். 1) முதல் பெரம்பலூர் நகர்ப் பகுதிகளான பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், துறைமங்கலம், மின் நகர், சங்குப்பேட்டை, துறையூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்குமாதவி சாலை, மதனகோபாலபுரம், எளம்பலூர் சாலை, அரணாரை உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் 8 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.''