அறந்தாங்கி, ஜன. 29: அறந்தாங்கி அருகே சடையமங்களத்தில் மக்கள் தொடர்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் கதிராமங்களம் ஊராட்சியில் உள்ள சடையமங்களம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமிற்கு அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியர் பி. லீலாவதி தலைமை வகித்து, பொதுமக்களின் மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
ஆவுடையார்கோவில் ஒன்றியக் குழு முன்னாள் தலைவர்கள் இரா. துரைமாணிக்கம், இரா. சுந்தர்ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் அறந்தாங்கி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயம் சண்முகம், வட்டாட்சியர் இரா. மூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் 46 மனுக்கள் பெறப்பட்டதில், 12 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.