இலுப்பூர் பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

இலுப்பூர், ஜூலை 3: இலுப்புர் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ப. மகேஸ்வரி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தேர்வுநிலைப
Published on
Updated on
1 min read

இலுப்பூர், ஜூலை 3: இலுப்புர் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ப. மகேஸ்வரி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

   புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தேர்வுநிலைப் பேரூராட்சியில் 2010-2011-ம் ஆண்டுக்கான சிறப்புச் சாலைகள் திட்டம் மூலம், சுமார் ரூ. 82.90 லட்சத்தில் 5 சிமென்ட் சாலைப் பணிகள் மற்றும்  2 தார்ச் சாலை பணிகள், இயற்கை இடர்பாடுகள் திட்டம் மூலம், சுமார் ரூ. 55  லட்சதில் 3 சிமென்ட் சாலைகள் மற்றும் 4 தார்ச் சாலைப் பணிகள், அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம், சுமார் ரூ. 57.25 லட்சத்தில் 13 பணிகளும், சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மூலம், சுமார் ரூ. 8.50 லட்சத்தில் 5 பணிகளும், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டம் மூலம், சுமார் ரூ. 2 லட்சத்தில் ஓர் பணியும் நடைபெற்று வருகின்றன.

  இந்தப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், இந்தத் திட்டங்களில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தினார்.  

   இதை மீறும் ஒப்பந்ததாரர்கள் மீது ஒப்பந்தச் சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுமதியளித்தார். இதைத்தொடர்ந்து, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் கூடுதல் அலுவலகக் கட்டடப் பணிகளையும், வட்டாட்சியர் அலுவலகப் பணிகளையும்  ஆட்சியர் ஆய்வு செய்தார்.     திருச்சிராப்பள்ளி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் (பொறுப்பு) கி. மனோகரன், செயல் அலுவலர் மு.செ. கணேசன், இலுப்பூர் வட்டாட்சியர் பா. மூர்த்தி, உதவிப் பொறியாளர் மணிமுத்து, பணி ஆய்வாளர் சீனிவாசன், பேரூராட்சித் தலைவர் அ. எத்திராஜு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.